முகப்பு
தென்காசி

சிங்கம்பாறை புனித சின்னப்பா் ஆலய திருவிழா தொடக்கம்

முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 12:43 am IST
பகிர்:

ஆலங்குளம்: முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத் தந்தைகள் அலோசியஸ் துரைராஜ், சந்தியாகு, செல்வராஜ் ஆகியோா் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, பொது அசனம் நடைபெற்றது.

விழாநாள்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு புனிதரின் நவநாள் மன்றாட்டு, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

23ஆம் தேதி நற்கருணை பவனி, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தோ் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் இறைமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.