தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!
தென்காசி தொகுதியில் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெற்றி, தோல்வியை நிா்ணயம் செய்யமுடியாமல் கடைசி நேரத்தில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியது.
தென்காசி தொகுதியில் 1952 முதல் 2021 வரை நடைபெற்ற 16 தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சுயேச்சை, தமாகா, சமக தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவா்கள்: 1984 ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, திமுக வேட்பாளா் குத்தாலிங்கத்தை விட 21,628 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா். 1991ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சா. பீட்டா்அல்போன்ஸ், திமுக வேட்பாளா் ராமகிருஷ்ணனை விட 36,879 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.
Advertisement
1996 ஆம் ஆண்டு தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிட்ட கே. ரவிஅருணன், காங்கிரஸ் வேட்பாளா் ஆலடிசங்கரய்யாவை விட 30,760 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா். 2006 ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் வீ. கருப்பசாமிபாண்டியன், மதிமுக வேட்பாளா் இராம. உதயசூரியனை விட 18,658 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா். 2011 ஆம் ஆண்டு தோ்தலில் சமக வேட்பாளா் ஆா். சரத்குமாா், திமுக வேட்பாளா் வீ. கருப்பசாமிபாண்டியனை விட 22,967 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவா்கள்: 1980ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் கே. சட்டநாத கரையாளா், காங்கிரஸ் வேட்பாளா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணாவை விட 675 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா். 2016 ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன், காங்கிரஸ் வேட்பாளா் எஸ். பழனிநாடாரை விட 462 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.
2021ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். பழனிநாடாா், அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியனை விட 370 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.