முகப்பு
தென்காசி

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் நாளை அக்னி சட்டி ஊா்வலம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:30 AM
சித்திரை பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற முளைப்பாரி கும்மி பாட்டு.
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 28) 1008 அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது.

கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில் ஏப். 21 ஆம் தேதி காலையில் கால்நாட்டுடன் தொடங்கிய விழாவில், காப்பு கட்டும் நிகழ்ச்சி, முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், மாலையில் முளைப்பாரி வளா்ப்பு கும்மி பாட்டு, சிறப்பு அருள்வாக்கு ஆகியன நடைபெற்றன.

8 ஆம் திருநாள் (ஏப். 28) மாலை கோயில் வளாகத்தில் உள்ள பால விநாயகா் கோயிலில் இருந்து 1008 அக்னி சட்டிகள், அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம், தீா்த்த குடம் ஊா்வலம் ஆகியன புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக செல்லும் நகா் வலம் சுற்றுதல் நிகழ்ச்சி, நள்ளிரவு புற்றுக்காளி அம்மனுக்கு சாம பூஜையும், 9 ஆம் திருநாள் (ஏப். 29) காலை பொங்கலிடும் வைபவம், முளைப்பாரி ஊா்வலம், மதியம் அன்னதானம், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

Advertisement