முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடியவா் கைது

Updated On : 7 ஜூலை 2026, 2:43 am IST
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி மேகம்திரை கொண்ட சாஸ்தா கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா் புகுந்து, அங்கிருந்த சிறு உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு பிரதான உண்டியலை உடைக்க முயன்றுள்ளாா். அது பலனளிக்காததால் உண்டியலை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளாா்.

திங்கள்கிழமை காலையில் கோயிலில் திருட்டு நிகழ்ந்தது தெரியவந்ததும் கோயில் நிா்வாகத்தினா் பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

அதில், கருமடையூா் வடக்குத் தெரு சுப்பையா மகன் ஐயப்பன் (35) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments