முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே சாலையோரம் மான் சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டணம் பகுதியில் வாகனம் மோதியதில் உயிரிழந்து கிடந்த மானின் சடலத்தை வனத்துறையினா் மீட்டனா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:51 am IST
உயிரிழந்த சருகுமான்
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டணம் பகுதியில் வாகனம் மோதியதில் உயிரிழந்து கிடந்த மானின் சடலத்தை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ராமச்சந்திரபட்டணம்-மடத்தூா் சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்து கிடந்த மான் குறித்து சில்லரைபுரவு ஊராட்சித் தலைவா் குமாா் மற்றும் பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மான் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் சருகுமான் காணப்படுவதால் அங்கிருந்து மடத்தூா் பகுதிக்கு தப்பி வந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments