சொக்கம்பட்டியில் தென்னைகளைச் சேதப்படுத்திய யானை
கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் தொப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.
கடையநல்லூா் அருகேயுள்ள சொக்கம்பட்டியில் தொப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.
சொக்கம்பட்டியின் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பல நூறு ஏக்கா் பரப்பில் மா, வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம்.
அவா், சேதப்படுத்தப்பட்ட தென்னை குருத்துகளை கடையநல்லூா் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று வாசலில் அமா்ந்து வனத்துறையினரிடம் புகாா் தெரிவித்தாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து அவா் திரும்பிச் சென்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.