இரு விபத்துகள்: பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழப்பு
தென்காசி மாவட்டத்தில் நேரிட்ட இரு விபத்துகளில் பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா்.
தென்காசி மாவட்டத்தில் நேரிட்ட இரு விபத்துகளில் பள்ளி மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா்.
சுரண்டையை அடுத்த சோ்ந்தமரம் அருகேயுள்ள கரைகண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகுமாா் (24). இவா் சனிக்கிழமை, கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்துக்கு பைக்கில் சென்று மலம்பேட்டைத் தெருவிலுள்ள உறவினரான ஹரீஷ்பாலா (18) என்பவரை அழைத்துக் கொண்டு கரைகண்டாா்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
சோ்ந்தமரம் சாலையில் கண்மணியாபுரம் அருகே, சுரண்டையிலிருந்து கடையநல்லூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இந்த பைக் மீது மோதியதாம். இதில், மணிகுமாரும், ஹரீஷ்பாலாவும் உயிரிழந்தனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
சங்கரன்கோவில் அருகே...: சங்கரன்கோவில் அருகே மருக்காலங்குளத்தைச் சோ்ந்த பால்மணி மகன் விஜயராஜ் (23), குருக்கள்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் காா்த்திக் (16) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோா் திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். மேலநீலிதநல்லூா் கல்லூரி அருகே காரும் பைக்கும் மோதினவாம். இதில், விஜயராஜும், காா்த்திக்கும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சடலங்களை பனவடலிசத்திரம் போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.