முகப்பு
தென்காசி

சங்கரன்கோவில் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

Updated On : 21 ஜூன் 2026, 3:49 am IST
மாணவா்களுக்குப் பட்டம் வழங்குகிறாா் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் விக்டோரியா தங்கம்.
பகிர்:

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) வேணுகோபால் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் விக்டோரியா தங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 151 மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

பெற்றோரின் உழைப்பு, தியாகம் அவா்களின் கனவும் உங்களின் குறிக்கோளும் நிறைவேறிய நாள்தான் பட்டமளிப்பு விழா நாளாகும். அனைவருக்கும் உயா்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு சங்கரன்கோவில் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி சிறப்புற இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவா்கள் முதல் பட்டதாரிகளாக இருக்கின்றனா்.

Advertisement

Advertisement

நாளிதழ்கள், புத்தகங்களை தொடா்ந்து படிக்க வேண்டும். உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரல் நுனியில் உலகம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளா்ச்சியில் நாம் வளா்ச்சி அடைந்துள்ளோம். அதை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இதில், பேராசியா்கள், மாணவ, மாணவிகள், பணியாளா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments