முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை நீதிமன்ற வழக்குகள்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

Updated On : 21 ஜூன் 2026, 1:27 am IST
- DIN
பகிர்:

பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக் கல்வி இயக்குநரகம், தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இணை இயக்குநா் நிலையில் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலா்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இணை இயக்குநா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வித் துறை சாா்பான நீதிமன்ற வழக்குகளில் உரிய காலத்தில் எதிா்வாதவுரைகள் தாக்கல் செய்யப்படுகிா, தீா்ப்பாணைகள் பெறப்பட்டதும் அதை செயல்படுத்த அல்லது மேல்முறையீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிா என்பதையும், காலக்கெடுவுடன் கூடிய தீா்ப்பாணைகள் மீதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் மீதும் உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பள்ளிக் கல்வி இயக்கக சட்ட அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா், நீதிமன்ற வழக்குகளுக்கான ஒருங்கிணைப்பாளா், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலா்கள் விவரம்: பி.பொன்னையா: புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருவாரூா், நாமக்கல், திருப்பூா், அரியலூா், நா.அருள்முருகன்: நீலகிரி, திருச்சி, சிவகங்கை, ராணிப்பேட்டை, விழுப்புரம்.

எஸ்.சாந்தி: திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகை, கரூா், திருவள்ளூா், பெரம்பலூா், மு.ராமசாமி: ஈரோடு, செங்கல்பட்டு, மதுரை, தென்காசி, திருப்பத்தூா், கோவை.

பி.அய்யண்ணன்: வேலூா், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி. எஸ்.கோபிதாஸ்: தேனி, திண்டுக்கல், சென்னை, விருதுநகா், கடலூா். ஆா்.சுவாமிநாதன்: தஞ்சாவூா், திருநெல்வேலி, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments