முகப்பு
தேனி

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: கேரள இடைத்தரகா் தேனி நீதிமன்றத்தில் சரண்

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத் வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 12:16 am IST
தேனி நீதிமன்றத்தில் நீட் தோ்வு முறைகேடு வழக்கில் வியாழக்கிழமை சரணடைந்த இடைத்தரகா் ரஷீத்தை பெரியகுளம் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸாா்.
பகிர்:

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத் வியாழக்கிழமை தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவரான சென்னையைச் சோ்ந்த உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் ஆகியோரை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை, தா்மபுரி மாவட்டங்களில் உள்ள சில அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவா்கள், அவா்களது பெற்றோா் என மொத்தம் 16 போ் கைது செய்யப்பட்டனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் என்பவா் இடைத்தரகராக செயல்பட்டது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரஷீத், கா்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகா் பகுதியில் வசிப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ரஷீத் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத் பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டாா்.

நீதிமன்றத்தில் ரஷீத் சரணடைந்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரஷீத்தை காவலில் எடுத்து விசாரித்தால் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்களின் முழு விவரமும் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments