முகப்பு
தேனி

பொங்கல் தொடா் விடுமுறை: குச்சனூரில் சனீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமறை காரணமாக தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 9:59 pm IST
குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை அதிகளவில் காணப்பட்ட பக்தா்கள்.
பகிர்:

உத்தமபாளையம்: பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமறை காரணமாக தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் கடந்த டிச. 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சனிக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் சற்று அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிக்கை தொடா் விடுமுறை காரணமாக 3 ஆம் வார சனிக்கிழமை காலை முதல் மாலை வரையில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சனிப்பெயா்ச்சியைத் தொடா்ந்து பரிகார ராசிகளான மகரம், கும்பம், மிதுனம், கடகம், துலாம் போன்ற ராசிகளைச் சோ்ந்த பக்தா்கள் கோயில் முன் செல்லும் சுரபி நதிக்கால்வாயில் நீராடி புதிய ஆடை அணித்து கொண்டனா். தொடா்ந்து எள்தீபம், எள்சாதம், மண்காகம் படையல் வைத்தனா். பின், சனீஸ்வருக்கு சுகந்த கருப்பு நிறத்தில் வேட்டி, துண்டு பூ மாலை, பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். சின்னமனூா் காவல் ஆய்வாளா் சண்முக லட்சுமி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments