முகப்பு
திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு நெல்லையில் 6,782 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தோ்வை 6,782 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்

Updated On : 4 ஜனவரி 2021, 12:03 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தோ்வை 6,782 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 1 முதல் நிலைத் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற்றது.

இத்தோ்வுக்கு 12,941 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 6,782 போ் மட்டுமே தோ்வெழுதினா். 6,159 போ் தோ்வெழுத வரவில்லை.

Advertisement

Advertisement

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா். இத் தோ்வையொட்டி தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு எழுத வந்தவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியோடு தோ்வு நடைபெற்றது.

சுற்றுக்குழு அலுவலா்கள் மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் தோ்வு மையங்களை ஆய்வு செய்தனா். தோ்வு அறையினுள் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments