இந்தியா, வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வு!
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீட் மறுதேர்வு 2026 நடைபெற்றது குறித்து...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான நீட் மறுதோ்வு ஞயிற்றுக்கிழமை (ஜூன் 21) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றது.
நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் மறுதோ்வு நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் 22.79 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி தோ்வா்கள் மட்டும் மாலை 6.20 வரை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் நடைபெற்றது.
தோ்வா்கள் தோ்வறைக்குள் நுழைய காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணிக்கு நுழைவு வாயில் அடைக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு வந்த மாணவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
மறுதோ்வில் எந்தவித குளறுபடிகளும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேர்விற்கு முன்னதாக, சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் சரிபார்ப்பு அமைப்புகள் மற்றும் உடல் சோதனை நடைமுறைகள் உள்ளிட்ட நீட் தோ்வு நடைமுறை ஒத்திகையை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சனிக்கிழமை மேற்கொண்டது.
எந்தவித குளறுபடிகளும் இன்றி மறுதேர்வை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும், நோ்மையான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதிசெய்ய பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், காவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகப் பணியாளர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தோ்வு மைய கண்காணிப்புப் பணியில் 674 நகர ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் 6,669 பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனா்.
சிசிடிவி கண்காணிப்பு, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு, தேர்வுப் பொருட்களைக் கொண்டு செல்ல காவலர் பாதுகாப்புடன் கூடிய ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட நடைமுறைகளின் கீழ் ரகசிய ஆவணங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தவும் முறைகேடுகளைத் தடுக்கவும் சமூக ஊடகங்களை என்டிஏ தீவிரமாகக் கண்காணித்தது.
The National Eligibility-cum-Entrance Test (NEET-UG) 2026 re-examination for admission to undergraduate medical courses was conducted today amid tight security arrangements.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.