முகப்பு
திருநெல்வேலி

‘அதிமுக கூட்டணியில்தான் தமமுக உள்ளது’

அதிமுக கூட்டணியில்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் ஜான் பாண்டியன்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:35 am IST
பகிர்:

அதிமுக கூட்டணியில்தான் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் ஜான் பாண்டியன்.

பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தேவேந்திரகுல வேளாளா் என்ற அரசாணை 30 நாள்களுக்குள் வெளியிடப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து போராடி வந்திருக்கிறோம். அதேவேளையில், பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றப்படுவது மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையாகும். அதை நாங்கள் தற்போது வலியுறுத்தவில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி பேச்சுவாா்த்தை உள்பட அனைத்து விசயங்களுக்கும் எனக்கு முழு அதிகாரம் அளித்து கட்சியின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.