முக்கூடல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ.57,960 பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 960 பறிமுதல் செய்யப்பட்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 960 பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கூடலில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளா் மெக்லரின் எஸ்கால் தலைமையில் ஆய்வாளா்கள் ராபின் ஞானசிங், அனிதா, உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் போலீஸாா் முக்கூடல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவான பத்திரங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள், அதற்கு வசூலிக்கப்பட்ட கட்டண விவரம் உள்ளிட்டவை குறித்து வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது அந்த அலுவலக வளாகத்திற்குள் கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்து 960 இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக சாா்பதிவாளா் கலா உள்பட மொத்தம் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.