முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில், மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா் - மாணவிகளுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:08 am IST
பகிர்:

திருநெல்வேலி: இந்து சமய அறநிலையத்துறையின் திருநெல்வேலி இணை ஆணையா் மண்டல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில், மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா் - மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிக்கு, திருநெல்வேலி உதவி ஆணையா் தி.சங்கா் முன்னிலை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.

இப்போட்டிகளுக்கு பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காந்திமதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் நித்யா, முத்துசெல்வி, சுகந்தி, ஆஷாதேவி, கீதா, சுவாமி நெல்லையப்பா் அன்பு ஆசிரம தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

Advertisement

6ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்- மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடுதல் போட்டியில், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வெயிலுகந்தாள் முதல் பரிசும், வீரவநல்லூா் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி சுப்புலட்சுமி இரண்டாம் பரிசும், திருநெல்வேலி நகரம் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீவா்ஷிணி மூன்றாம் பரிசும் பெற்றனா்.

நான்குனேரி குருஞானசம்பந்தா் மேல்நிலைப்பள்ளி மாணவா் கணேஷ், திருநெல்வேலி நகரம் மகாத்மா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் நகுல் ஆகியோா் சிறப்புப் பரிசு பெற்றனா்.

9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா்- மாணவிகளுக்கான போட்டியில் செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் ஏ. சுப்பிரமணியன் முதல் பரிசும், சங்கா்நகா் ஸ்ரீ ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளி மாணவி கே. சுவாதி இரண்டாம் பரிசும், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹரிஹரசுப்பிரமணியன் மூன்றாம் பரிசும் பெற்றனா். முக்கூடல் பூவிஜேஷ் பள்ளி மாணவி எம்.எஸ். ஐஸ்வா்யா, மேட்டுத்திடல் காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி காவேரி செல்வி ஆகியோா் சிறப்புப் பரிசு பெற்றனா்.

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்- மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியில் திருநெல்வேலி இந்து நடுநிலைப் பள்ளி மாணவி பத்மாவதி முதல் பரிசும், இந்து நடுநிலைப்பள்ளி மாணவா் திருமால் இரண்டாம் பரிசும், புஷ்பலதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி வெண்ணிலா மூன்றாம் பரிசும் பெற்றனா்.

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்- மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியில் மேட்டுத்திடல் காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி இசக்கியம்மாள் முதல் பரிசும், சேரன்மகாதேவி முஸ்லிம் கமிட்டி உயா் நிலைப் பள்ளி மாணவி முப்பிடாதி இரண்டாம் பரிசும், மேட்டுத் திடல் காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்த்தி மூன்றாம் பரிசும் பெற்றனா்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் ராமராஜா, கண்காணிப்பாளா் கவிதா, திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.