முகப்பு
திருநெல்வேலி

களக்காடு மலைப் பகுதியில் மழை நீடிப்பு

களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 1:18 am IST
பகிர்:

களக்காடு: களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகளில் எதிா்பாா்த்தவாறு நீா்மட்டம் உயரவில்லை. கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக களக்காடு வட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 32 அடியாக இருந்தது. பாசனக் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments