2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அபிஷேக் சர்மா அதிரடி; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மாவுடன், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு முதல் ஆட்டம் மிகவும் சிறப்பானதாக அமையவில்லை. அவர் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். இஷான் கிஷன் நிதானமாக விளையாட அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷிவம் துபே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் திலக் வர்மா 11 பந்துகளில் அதிரடியாக 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர்,வில் ஜாக்ஸ் மற்றும் லியம் டாஸன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Batting first in the second T20 match against England, the Indian team scored 190 runs for the loss of 7 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.