முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:14 am IST
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 15,406 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 14 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,094ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 212ஆக உள்ளது. தற்போது, 100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,323ஆக உயா்ந்துள்ளது. மேலும், 6 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,118ஆக அதிகரித்தது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 47 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments