முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில் வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:16 am IST
பகிர்:

வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அய்யனூா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் ஆறுமுகம் (60). இவா், சனிக்கிழமை இரவு வீரவநல்லூா் காவல் நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற வேன் அவா் மீது மோதியதாம். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் ஆறுமுகம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments