முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் - 3 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஹார்ட் பீட் - 3 இணையத்தொடரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 10:14 am IST
பகிர்:

ஹார்ட் பீட் இணையத் தொடர் மூன்றாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

Advertisement

Advertisement

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசனில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் வருகின்ற ஜூலை 30 முதல் ஒளிபரப்பாகும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

summary

Heart Beat 3 Release Date Announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments