பழைய காதல், புதிய உணர்வுகள்... ஹார்ட் பீட் - 3 தொடரின் புதிய ப்ரோமோ!
ஹார்ட் பீட் - 3தொடரின் புதிய முன்னோட்டக் காட்சி குறித்து...
ஹார்ட் பீட் - 3 தொடரின் புதிய முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
Advertisement
Advertisement
முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
இதையடுத்து, அண்மையில் வெளியான ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3 ஆம் பாகத்தின் முன்னோட்ட விடியோவில், முந்தை பாகங்களில் தீபா பாலு(ரீனா) மற்றும் கார்த்திக் குமார்(விஜய்) ஆகியோர் பணிபுரிந்து வந்த ஆர்.கே. மருத்துவமனையிலிருந்து விலகி, இருவரும் ஏ.எம். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
அனுமோள்(ரதி) ஆர்.கே. மருத்துவமனையிலேயே பணிபுரிவதுபோல, சாருகேஷ்(அர்ஜுன்) மருத்துவப் படிப்பைத் தொடர்வதுபோல காண்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிதாக வெளியான முன்னோட்டக் காட்சியில், தீபா பாலு(ரீனா) மற்றும் சாருகேஷ்(அர்ஜுன்) இருவரும் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நிலையில், புதிய நண்பர்கள் மீது ஈர்ப்பு வருவதுபோல காண்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பாகங்களிலும் தீபா பாலு, சாருகேஷ் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
A new preview clip of the 'Heart Beat' series has been released and is capturing the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.