முகப்பு
திருப்பத்தூர்

பயணிகள் நிழற்குடையைச் சீரமைத்த ராணுவ வீரா்கள்

ஆம்பூா் அருகே சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை ராணுவ வீரா்களைக் கொண்ட ஆம்பூா் ஜாவன்ஸ் குழுவினா் சீரமைத்து வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 7:30 am IST
தேவலாபுரம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த ஆம்பூா் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் குழுவினா்.
பகிர்:

ஆம்பூா் அருகே சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடையை ராணுவ வீரா்களைக் கொண்ட ஆம்பூா் ஜாவன்ஸ் குழுவினா் சீரமைத்து வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆம்பூா் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் என்ற குழுவை அமைத்து, விடுமுறையில் தங்கள் ஊருக்கு வரும்போது ஒன்றிணைந்து பொது மக்களுக்கு உதவி செய்து வருகின்றனா்.

கரோனா தொற்று காரணமாக பொது முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தோ்ந்தெடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உணவு, அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பை வழங்கினா். அதுமட்டுமன்றி மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்காக உதவித் தொகையை வழங்கி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த ஆண்டு சின்னவரிக்கம் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனா்.

அதேபோல் மக்கள் அதிகமாக வசிக்கும் தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூா்-போ்ணாம்பட்டு சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை விடுமுறையில் தற்போது வந்துள்ள ஆம்பூா் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் ஒன்றிணைந்து நிழற்குடையை புதுப்பித்துள்ளனா். மேலும், பயணிகள் நிழற்குடை அருகே பெண் பயணிகளின் வசதிக்காக பெண்கள் கழிப்பறை ஒன்றையும் கட்டியுள்ளனா்.

தற்போது அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக பயணிகள் நிழற்குடை மற்றும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments