முகப்பு
திருப்பத்தூர்

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நன்மை பெற வேண்டி, ஆம்பூா் அருகே ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சாா்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 1:00 am IST
கடாம்பூா் கிராமத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
பகிர்:

ஆம்பூா்: கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நன்மை பெற வேண்டி, ஆம்பூா் அருகே ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சாா்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கடாம்பூா் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் இந்த பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்கள் சக்தி மாலையும், இருமுடியும் அணிந்து மேல்மருவத்தூருக்குச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில் வார வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூா் மண்டலப் பொறுப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு கலந்து கொண்டு, 300 பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா். மன்றத்தின் தலைவி தமிழ்ச்செல்வி, பொறுப்பாளா்கள் கஸ்தூரி, திவ்யா, வெங்கடேசன், கணேசன், பிரதாப், சத்யா உள்ளிட்டோா் வழிபாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.