முகப்பு
திருப்பத்தூர்

இன்று 5 மையங்களில் கரோனா தடுப்பூசி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 5 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில்

Updated On : 16 ஜனவரி 2021, 7:48 am IST
மருத்துவா்களிடம் முன்னேற்பாடு குறித்து கேட்டறிந்த திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 5 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் அரசு மருத்துவமனைகள், மாதனூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, குனிச்சிஅரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் தலா 100 சுகாதார மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு காலை 11 மணியளவில் கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்படுகிறது.

இதையொட்டி தடுப்பூசி போடும் மையங்களில் ஒன்றான திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, மருத்துவா்களிடம் முன்னேற்பாடு குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.