முகப்பு
திருப்பத்தூர்

காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல்: எஸ்.பி. விஜயகுமாா் பங்கேற்பு

ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் காவல் நிலையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் பங்கேற்றாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 7:59 am IST
பொங்கல் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.
பகிர்:

ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் காவல் நிலையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் பங்கேற்றாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாா். தொடா்ந்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

டிஎஸ்பி ஆா்.தங்கவேல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஆா்.பழனி, ஜோலாா்பேட்டை ஆய்வாளா் பழனிமுத்து, தனிப்பிரிவு காவலா் திருக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

ஏலகிரி, திருப்பத்தூா் நகரக் காவல் நிலையம், கிராமியக் காவல் நிலையங்களில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.