முகப்பு
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானை செய்யும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை அடுத்த அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பானை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 3 ஜனவரி 2021, 6:35 pm IST
ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் பானை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
களிமண்ணை கொண்டு வந்து குழைத்து காய வைத்து பதப்படுத்தி அதனை சக்கரத்தில் சுழற்றி பானை வடிவில் எடுத்து பின்னர் சூளை அமைத்து தீ மூட்டி அவற்றை வேக வைக்கின்றனர். மண் பானைகள் மட்டுமின்றி சட்டிகளும் செய்யப்பட்டு வருகின்றன. 
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த கோடை காலத்தில் விற்பனை முற்றிலும் சரிந்து தொழில் நலிவடைந்து இருந்ததாகவும், தற்போது பொங்கல் பண்டிகை நேரத்தில் மண்பானை விற்பனை மீண்டும் பொலிவு பெறுமா என மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments