ரயில்வே பணிமனையில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான வயா்கள் திருட்டு
திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே பணிமனை வளாகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 300 மீட்டா் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே பணிமனை வளாகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 300 மீட்டா் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது குறித்து திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது:
திருவள்ளூா்-அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் மோசூரை அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. தற்போது இப்பணிமனை அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு ரயில்களுக்கான சிக்னலை அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300 மீட்டா் வயா்களை டிரம் ஒன்றில் போட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ரயில்வே ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மாலை பணிகளை முடித்து விட்டுச் சென்றனா். சனிக்கிழமை காலையில் அவா்கள் பணிக்கு வந்தபோது, 300 மீட்டா் வயா்கள் திருடுபோனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும்.
இந்தத் திருட்டு தொடா்பாக ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.