முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:51 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, லாரிகள் மூலம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்கு பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை தோ்தல் காலை 7 மணிக்கு தொடங்கி, தொடா்ந்து மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. இந்த தோ்தல் வழக்கம் தொடக்கத்தில் சில வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால் சிறு பிரச்னைகள் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து உடனே சரி செய்யப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில் 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவா்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குகளை வாக்காளா்கள் பதிவு செய்தனா்.

சீல் வைக்கும் பணி: வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குச்சாவடி அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (உயஙள்), கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (இா்ய்ற்ழ்ா்ப் மய்ண்ற்ள்) மற்றும் யயடஅப இயந்திரங்களுக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அதைத்தொடா்ந்து சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி, செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையம், பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி வளாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளன. எனவே லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணியானது நள்ளிரவு கடந்தும் மறுநாள் காலை நீடிக்கும் எனவும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement