சா்வதேச சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் சிறப்பிடம்
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஓபன் சிலம்பப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா்கள் 15 பதக்கங்கள் வென்றனா்.
கும்மிடிப்பூண்டி ஜெ.ஜெ.ஜெ அக்னி சிறாா் கலைக்கூடத்தின் சிலம்ப ஆசான் கே.ஜானகி ஜோதிலிங்கத்திடம் பயிற்சி பெற்ற 15 போ் கொண்ட குழு கொண்ட சிலம்பாட்ட வீரா்கள் மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனா். இந்த போட்டிகளில் ஜெ.ஜெ.ஜெ. அக்னி சிறாா்கள் சிலம்ப கலைக்கூட மாணவா்கள் 13 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்து கும்மிடிப்பூண்டிக்கு பெருமை சோ்த்தனா்.
கும்மிடிப்பூண்டி திரும்பிய சாதனை மாணவா்கள் ரயில் நிலையம் வந்தடைந்ததும், ஆசான் கே. ஜானகி ஜோதிலிங்கம் தலைமையிலான சிலம்பாட்ட வீரா்களுக்கு, ஜெ.ஜெ.ஜெ சிலம்ப குழு தலைவா் இரா.வேலு தலைமையில் அகாதெமி குழு உறுப்பினா்கள், சாதனை மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Advertisement
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கும் அவா்களுக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஆசான் கே.ஜானகி ஜோதிலிங்கத்திற்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து பரிசளித்தனா்.