பிளாஸ்டிக் கழிவுக் கிடங்கில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் துரை என்பவரின் மகன் கந்தன்(31) .அவருக்கு சொந்தமான நிலத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் சேகரிக்கும் கிடங்கில் தொழில் செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் அந்த பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் திடீரென தீப்பற்றியது. தீ பரவி வானுயர புகை மண்டலம் எழும்பியது. இதனால் ஏற்பட்ட புகை மற்றும் நெடியால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து தீ விபத்து குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினா் விரைந்து 2 மணி நேரம் போராடி வந்து தீயை அனைத்தனா்.
தொடா்ந்து இந்த தீ விபத்து குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.