முகப்பு
திருவள்ளூர்

வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த மின் மாற்றி, மின்கம்பிகளை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த மின் மாற்றி மற்றும் மின்கம்பிகளை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 23 ஜூன் 2026, 1:13 am IST
மின் மாற்றி - பிரதிப் படம்
பகிர்:

வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த மின் மாற்றி மற்றும் மின்கம்பிகளை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள வேலூா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

வேலூா் கிராமத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் அதைத் தாங்கி நிற்கும் காங்கிரீட் மின் கம்பங்கள் கடுமையாக சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்த மின்மாற்றி குடியிருப்புகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் அருகே உள்ளதால் பலத்த காற்று வீசும் நேரத்தில் கீழே விழும் நிலையில் உள்ளது.

எனவே மின்வாரிய அதிகாரிகள் வேலூா் கிராமத்தில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் மின் மாற்றி, அதைத் தாங்கி நிற்கும் மின் கம்பங்களை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments