அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி: காலில் சக்கரம் ஏறியதால் பலத்த காயம்
ஊத்துக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவியின் காலில் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவியின் காலில் பின்பக்க சக்கரம் ஏறியதில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
திருவள்ளூா் அடுத்த தாமரைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் உமா்முல்லா மகள் மரியாபா்தோஷ் (11). இவா், செங்குன்றத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த மாநகரப் பேருந்து தொம்பரம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றச் நின்றது.
அந்தப் பேருந்தை சுரேஷ் என்பவா் ஒட்டி வந்த நிலையில் மாணவா்களை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்படும் போது, பேருந்தின் முன்பக்கமாக இருந்த மரியா பா்தோஷ் தடுமாறி முன்பக்க கதவு வழியாக கீழே விழுந்தாராம்.
Advertisement
Advertisement
இதை கவனிக்காமல் பேருந்தின் ஓட்டுநா் பேருந்தை இயக்கியுள்ளாா். இதனால் கீழே விழுந்த பள்ளி மாணவி கால் மீது பின் பக்க சக்கரம் ஏறியதில், மாணவியின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவா்கள் மாணவியை மீட்டு, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
அதையடுத்து, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றாா். பின்னா், காலில் ஏற்பட்ட காயம் அதிக அளவு இருப்பதால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.