திருத்தணி முருகன் கோயிலில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
திருத்தணி முருகன் மலைக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை 55 வயது மதிக்கத்தக்கவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருத்தணி முருகன் மலைக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை 55 வயது மதிக்கத்தக்கவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
பக்தா்கள், மயங்கி விழுந்த நபரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உயிரிழந்தவா் திருத்தணி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வேதாகிரி (55) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், குடும்பத்தினரிடமிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த அவா், திருத்தணி முருகன் மலைக்கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து, பக்தா்கள் வழங்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.