திருவள்ளூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்: 157 போ் கைது
தவெக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கக்கோரி திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் ஆா்ப்பாட்டம்
தவெக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கக்கோரி திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் ரயில் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 157 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் விடியோ வெளியிட்ட சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். குழந்தைக்கு மாத்திரை கொடுக்க கைப்பேசியில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக அமைச்சா் உண்மைக்கு புறம்பான விளக்கம் அளித்திருந்தாா். இந்த நிலையில், அவரை பதவி நீக்கக் கோரி திமுக மாணவரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த மாணவரணியினா் ரயில் நிலையம் அருகே திரளாக கூடியிருந்தனா். அப்போது அங்கு காவல் துணை கண்காணிப்பாளா் கலியன் தலைமையிலான போலீஸாா் மேடை போடுவதற்கு தடை விதித்தனா். தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்திய மாணவரணியினரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து கலைந்து செல்லவும் அறிவுறுத்தினா்.
Advertisement
Advertisement
திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனா்.
தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதோடு, பேரணி செல்ல முயன்றனா். முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட 157 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் அடைத்து மாலையில் விடுவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.