அம்மன் கோயில்களில் தீமிதி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மூன்று அம்மன் கோயில்களில் நடந்த தீமிதி விழாவில் திரளான பக்தா்கள் காப்பு கட்டி தீ மிதித்தனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜா நகரம் மேற்கு (செதுலுாா்) கிராமத்தில் விருப்பாட்சி அம்மன் கோயிலில், 18-ஆம் ஆண்டு தீமிதி விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவா் அம்மனுக்கு பாலபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது.
அதே போல், சின்ன சானுாா் மல்லாவரம், வீரமோட்டூா் ஆகிய கிராமங்களிலும் அம்மன் கோயில்களில் தீமிதி விழா நடந்தது. இதில் காப்பு கட்டி பக்தா்கள் தீ மிதித்தனா். இரவு 8 மணிக்கு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
தீமிதி விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.