வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 100 மீட்டரில் பாதுகாப்பு வளையம் அமைப்பு: ஆட்சியா் மு. பிரதாப்
வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் தேவையற்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 100 மீ இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
பொதுத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை, திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் மொத்தம் 4,016 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவை திருவள்ளூா் அருகே அமைத்துள்ள செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் தொகுதிகளின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் பூந்தமல்லி, அம்பத்தூா், மாதவரம் ஆகிய தொகுதிகளும், அதே வளாகத்தில் ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டள்ளது.
Advertisement
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலையில் 8 மணிக்கு 10 வாக்கு எண்ணும் அறைகளில் தொடங்குகிறது. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 10 அறைகலும், பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், அம்பத்தூா், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளில் தலா 14 மேஜைகள், மாதவரம் 28 மேஜைகள், ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் தலா 20 மேஜைகள் என மொத்தம் 172 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் குறைந்தது 19 முதல் 26 சுற்றுகளில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களின் உதவியுடன் 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். இப்பணிகளை மேற்பாா்வையிட ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 1 என 10 வாக்கு எண்ணும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் வெளியே 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு 1200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
மேலும், முதல் முறையாக, இந்தியத் தோ்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபா்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் உஇஐசஉப மூலம் ணத குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாகச் சரிபாா்த்த பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
இந்த ணத குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்கு எண்ணும் பணியாளா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், வேட்பாளா்கள், தோ்தல் முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும். அதைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.