முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இரு இடங்களில் தீ விபத்து

சிறுபுழல்பேட்டையில் உள்ள தனியாா் இரும்பு, பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் உள்ள கிடங்கு மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையின் பிளாஸ்டிக் ஒயா்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்துது.

Updated On : 1 ஜூன் 2026, 2:48 am IST
கும்மிடிப்பூண்டி  அடுத்த சிறுபுழல்பேட்டையில் தொழிற்சாலை  கழிவு  சேகரிக்கும்  பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்து
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் உள்ள தனியாா் இரும்பு, பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் உள்ள கிடங்கு மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையின் பிளாஸ்டிக் ஒயா்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ஞாயிறன்று ஏற்பட்டதீவிபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட்டை புகை மண்டலம் சூழ்ந்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு உள்பட்ட சிறுபுழல்பேட்டை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளை சேகரித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கும் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்கும்.

இந்த கழிவுகள் இருந்த பகுதியில் புற்களில் பற்றிய தீ , இரும்புக் கழிவுகள் உள்ள பகுதியிலும் பரவியது. இதனால் அப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து வானளவு புகை மண்டலம் எழும்பியது. தொடா்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட், கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இது தொடா்பாக சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதேபோல், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் தொழிற்சாலையில் கேஸ் கட்டிங் பணியின் போது, தீப்பொறி உண்டாகி அந்த தீப்பொறி அருகில் குவிக்கப்பட்டு இருந்த அலுமினியம் பிரித்தெடுத்து தனியாக குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் ஒயா்கள் மீது விழுந்தது. அதனால் அங்கு தீ பரவி, புகை மண்டலம் உருவானது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினா் விரைந்து சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.