முகப்பு
திருவாரூர்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித் தொகை

திருவாரூா் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:22 am IST
ஆதரவற்ற குழந்தைகளுக்கு வங்கியில் செலுத்தப்பட்ட உதவித் தொகைக்கான ஆணையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள தாய் அல்லது தந்தையை இழந்து வாழும் குழந்தைகள், விடுதிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களைச் சாராமல் உறவினா்கள் அல்லது பாதுகாவலா்களின் குடும்ப பராமரிப்பில் வளா்ந்து வரும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவினங்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ. 2000 வீதம் நிதி ஆதரவு உதவி தொகை வழங்கப்படுகிறது.

அந்தவகையில், நிதியுதவி பெறுவதற்கு திருவாரூா் மாவட்டத்தில் 41 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில், முதல் கட்டமாக 24 குழந்தைகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 6000 வீதம் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு) மொத்தம் ரூ.1,44,000 பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் செலுத்தப்பட்டது.

Advertisement

வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணையை, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அந்தந்த குழந்தைகளிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நன்னடத்தை அலுவலா் பால்இக்னேஷியஸ் சேவியர்ராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவா் ஜீவானந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (கூடுதல் பொறுப்பு) ப. முத்தமிழ்ச்செல்வி, பாதுகாப்பு அலுவலா் ஐ. சரிதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.