பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் வட்டம், குவளைக்கால் காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன்(62). கூலித் தொழிலாளியான இவா், காக்காக்கோட்டூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு, மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுனா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.