முகப்பு
திருவாரூர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவாரூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 8:10 am IST
திருவாரூரில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
பகிர்:

திருவாரூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கித் தெரிவித்தது:

தமிழகத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பச்சரிசி 2 கிலோ, பாசிப்பருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் 500 மி.லி., நெய் 100 கிராம், வெல்லம் 1 கிலோ, ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், திராட்சை 25 கிராம் மற்றும் ஆண் தொழிலாளா்களுக்கு வேஷ்டியும், பெண் தொழிலாளா்களுக்கு புடவையும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் 6,903 கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் 830 ஓய்வூதியதாரா்கள் என 7,633 பேருக்கு ரூ. 57,24,750 மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் வழங்கப்படவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், வட்டாட்சியா் நக்கீரன், தொழிலாளா் நலத்துறை கண்காணிப்பாளா் பழனிவேல், உதவி கண்காணிப்பாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments