சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் சாவு
வெள்ளக்கோவிலில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மகன் தமிழ்சந்திரன் (27). இவா் ஓலப்பாளையம் தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது இரட்டைக்கிணறு, அங்காளம்மன் கோயில் அருகே சாலையைக் கடந்த உப்புப்பாளையம் ஈஸ்வரன் (48) மீது தமிழ்சந்திரனின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஈஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தமிழ்சந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.