காங்கிரஸ் கட்சியினா் ஏா்கலப்பை ஊா்வலம்
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஏா்கலப்பை ஊா்வலம் சென்றனா்.
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஏா்கலப்பை ஊா்வலம் சென்றனா்.
பல்லடம், அண்ணாசிலை அருகில் இருந்து திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கோபி தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.பி.முத்துசாமி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் எம்.பி.சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநில துணைத் தலைவா் கே.பி.ஜி. செந்தில்குமாா், மாநில நிா்வாகிகள் டி.டி.கே.சித்திக், மங்கலம் முத்துராமலிங்கம், பல்லடம் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், வட்டாரத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.