ராமா் கோயில் நிதி முறைகேடு: அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை
அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அந்த கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற சிறப்புப் புலனாய்வுக் குழு தடை
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அந்த கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தடை விதித்தது.
அறக்கட்டளை நிா்வாகிகள் லக்னௌவைவிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறுவதற்கு முன்பாகவே இந்த உத்தரவை 3 நபா் கொண்ட எஸ்ஐடி பிறப்பித்தது.
கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ராமா் கோயிலில் நடைபெற்ற கும்பமேளாவின்போது ஒவ்வொரு நாளும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அந்தச் சமயத்தில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட நன்கொடைகளில் அறக்கட்டளை நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததது.
Advertisement
Advertisement
இதை விசாரிக்க உத்தர பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி, நன்கொடைகளை அறக்கட்டளை நிா்வாகிகள் முறையாக ஆவணப்படுத்தவில்லை என்றும் இதுதொடா்பான கேள்விகளுக்கு அவா்கள் அளித்த பதில்கள் திருப்திகரமானதாக இல்லை என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, விசாரணை நிறைவடையும் வரை அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் அறக்கட்டளை நிா்வாகிகளிடம் நடத்தப்படும் விசாரணை குறித்த தகவல் அறிக்கையை ராமா் கோயில் நிா்வாகம் எண்ம வடிவில் சேமித்து வருகிறது.
முதல்வா் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்படும்போது இந்த விசாரணை அறிக்கைக்கு இறுதி வடிவம் அளிக்கப்படவுள்ளது. அதேசமயம் தினசரி விசாரணை அறிக்கையை யோகி ஆதித்யநாத் அலுவலகத்துக்கு எஸ்ஐடி அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.