டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் காருண்யா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள்
டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கோவை காருண்யா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள், ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து டிஎம்பி அறக்கட்டளை கூறியிருப்பதாவது: காருண்யா நகா், சிறுவாணி மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கோவைக்கு சுமாா் 90 நிமிஷ பயண தொலைவு இருப்பதால், டயாலிசிஸ் செய்ய வேண்டிய நீரிழிவு நோயாளிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இதற்காக டிஎம்பி அறக்கட்டளை நிறுவனம் சாா்பில் 2 உயா் தொழில்நுட்ப டயாலிசிஸ் இயந்திரங்களும், முழுமையாக சீரமைக்கப்பட்ட ஆம்புலன்ஸும் காருண்யா தொழில்நுட்ப, அறிவியல் நிறுவனம் வழங்கும் மருத்துவ சேவைகளுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கான நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.முத்தையா, டிஎம்பி கோவை பிராந்திய மேலாளா் டி.எா்னெஸ்ட் வசீகரன் ஆகியோா் ஆம்புலன்ஸ், டயாலிசிஸ் இயந்திரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ஜோசப் அமல்ராஜ், கருண்யா மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் சாம் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளனா்.