முகப்பு
திருப்பூர்

அருந்ததியா் உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்தக் கோரிக்கை

அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 1:58 am IST
பகிர்:

அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழா் பேரவை மகளிரணி சாா்பில் தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட மாநாடு உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்ட மகளிா் அணி செயலாளா் வெ.கெளசல்யா தலைமை வகித்தாா். நகர மகளிரணி செயலாளா் மு.தேவி வரவேற்றாா். இதில், ஆதித்தமிழா் பேரவை நிறுவனா் அதியமான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களாவன:

Advertisement

Advertisement

அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும். மேற்கு மாவட்டங் களில் அடா்த்தியாக வாழும் அருந்ததி இன மக்களுக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வழக்குரைஞா் அணி செயலாளா் கு.பெரியாா்தாசன், மாவட்டச் செயலாளா் மா.ஈழவேந்தன், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா். நகர மகளிா் அணித் தலைவா் தம்புராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.