போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சுரங்கப் பாதையில் எம்.எல்.ஏ. ஆய்வு
திருப்பூரில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூரில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாநகரில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால் டி.எம்.எஃப். சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதை திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். அப்போது நீா் ஊறிஞ்சப் பயன்படுத்தப்படும் மோட்டாரில் சேறும், சகதியும் அடைத்துக் கொள்வதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, மோட்டாா் பழுதை நீக்கி சுரங்கப் பாதை பராமரிக்கும் பணிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையா் சுப்பிரமணியம், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபுசரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.