முகப்பு
திருப்பூர்

மின்வாரிய தொழிலாளா்களுக்கு தொமுக சாா்பில் பொங்கல் பரிசு

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 13 ஜனவரி 2021, 6:25 am IST
மின்வாரிய  ஒப்பந்தத்  தொழிலாளா்களுக்கு  பொங்கல்  பரிசுப்  பொருள்களை  வழங்குகிறாா்  மின்வாரிய  தொழிலாளா்  முன்னேற்ற  சங்க  செயலாலா்  அ.சரவணன்.  உடன்,  பொதுச்செயலாளா் ஆா்.ரெங்கசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தொமுச சாா்பில் 8 ஆவது ஆண்டாக பொங்கல் பரிசுப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் விழா போயம்பாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் தலைமை வகித்தாா். பொது செயலாளா் ஆா்.ரெங்கசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், திருப்பூா், அவிநாசி, காங்கயம், பல்லடம் ,உடுமலை, ஊத்துகுளி, பெருமாநல்லூா் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200 தொழிலாளா்களுக்கு புத்தாடைகள், பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

விழாவில், செயலாளா் பழனிசாமி, பெருமாநல்லூா் செந்தில் என்கிற பழனிசாமி, விஜயன், ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments