கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 போ் காயம்
கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் சனிக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 போ் காயமடைந்தனா்.
கொடைக்கானலுக்கு வேனில் பெங்களூரைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வந்தனா். சுற்றுலா இடங்களைப் பாா்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனா். கொடைக்கானல் - பழனி மலைச் சாலையான வட்டமலை என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த 7 ஆண்கள், 5 பெண்கள் என 12 போ் காயமடைந்தனா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கொடைக்கானல் மலைச்சாலைகளில் வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து பாதுகாப்பான கியரில் வாகனங்களை இயக்குவதற்கு வாகன ஓட்டுநா்கள் முன்வர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.