முகப்பு
திருப்பூர்

40 பயனாளிகளுக்கு இருசக்கரவாகனத்துக்கான உத்தரவு வழங்கல்

காங்கயத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 25,000 மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்துக்கான உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:58 am IST
பயனாளிக்கு இருசக்கர வாகனத்துக்கான உத்தரவை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு.
பகிர்:

காங்கயத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 25,000 மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்துக்கான உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தாா். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உழைக்கும் மகளிா் 40 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

இதில், காங்கயம் நகராட்சி ஆணையா் தேவிகா, நகராட்சிப் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சி.கந்தசாமி, காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவா் என்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments